Wednesday, May 5, 2010

காவல் கதைகள் 5 நிஜமல்ல… கதை….



ஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி. விவசாயம்தான் பிரதான தொழில். காவிரிப் படுகையில் அமைந்த ஊருக்கு விவசாயத்தை விட வேறு என்ன தொழில் இருக்க முடியும் ?

“யப்பா ராசு.. கழனில இருக்கற அப்பாபுக்கு சாப்பாடு கொடுத்துட்டுப் போப்பா“ என்ற தனது அம்மாவின் குரலைக் கேட்டு அம்மா அருகே சென்றான் ராசு என்று அழைக்கப் பட்ட ராஜசேகர். குடும்பம் விவசாயக் குடும்பமாக இருந்தாலும், ராஜசேகருக்கு படிப்புத் தான் எல்லாம். அவன் படித்த அந்த அரசுப் பள்ளியில் அவன்தான் எல்லாப் பாடங்களிலும் முதல். அவன் அப்பாவுக்கு, அவன் நன்றாக படிப்பது குறித்து அவ்வளவு பெருமை.
“என்னய்யா.. உன் மவன் ஸ்கூல் பஸ்டாமே….“ என்று கேட்கும் போது, முகத்தில் பூரிப்பு வழியச் சொல்லுவார்.

“என்னை மாதிரி, வெத நெல்லு கூட தேறாம கைக்கும் வாய்க்கும் காலம் பூரா அவனாவது கஷ்டப் படாம இருக்கட்டுன்யா…“

ராஜசேகரும், அவன் தந்தை ஆசைப்படியே, படிப்பை முடித்து, சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்ந்தான். கேம்பஸ் இன்டர்வ்யூவில் கிடைத்த வேலையை வேண்டாம் என மறுத்து விட்டு, திருச்சி ஆர்ஈசியில் எம்.ஈ சேர்ந்தான். திருச்சியில் இரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. முடித்ததும், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்டர்வ்யூ. பாம்பே அழகாகத் தான் இருந்தது.

மத்திய அரசு நிறுவனத்தில் தமிழில் பதில் சொல்ல வாய்ப்பு உள்ளதா என்ன ?
அத்தனை கேள்விகளுக்கும் விடை தெரிந்தாலும் ஆங்கிலம் தெரியாதே ? என்ன செய்வான் ?

மனம் சோர்ந்து, ஊருக்கு திரும்பி வந்தான். “கவலப் படாதடா.. இன்னும் வேணும்னா படிடா….. வேற வேலை கெடைக்கும்“ என்ற அப்பாவின் வார்த்தைகள் ஆறுதலைத் தந்தாலும் சோர்வாகவே படுத்திருந்தான். தனியார் நிறுவனங்களில் சேர அவனுக்கு விருப்பம் இல்லை. அப்போது வளரத் தொடங்கியிருந்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள் அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

இரண்டு மாதங்களில் நடைபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தான். அடுத்த இரண்டு மாதங்களில் பயிற்சிக்கு அழைக்கப் பட்டான். இன்ஜினியரிங் படித்திருந்தாலும், அந்த காவல்துறை யூனிபார்ம், அவனுக்கு மிடுக்கையும் பெருமிதத்தையும் தந்தது.

சமுதாயத்துக்கு ஏதோ ஒரு சேவையைச் செய்ய ஒரு வாய்ப்பு என்று நினைத்து மகிழ்ந்தான். பயிற்சி முடித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உதவி ஆய்வாளர் பணி. திருப்தி கரமாக பணியாற்றி அனைவரிடமும் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற துடிப்பு அவனிடம் தெரிந்தது. அந்த கிராமம், கள்ளச் சாராயம் காய்ச்ச புகழ் பெற்ற ஒரு கிராமம். கள்ளச் சாராய ரெய்டுக்கு போலீசார் போனால், இரவு தெரு விளக்கை அணைத்து விட்டு, காவல்துறையினர் மேல் கல்லை எறியும் அளவுக்கு புகழ் பெற்ற ஊர். போலீசாரும், சத்தம் போடாமல் மாமூலை வாங்கிக் கொண்டு, அந்த ஊர்ப்பக்கமே போக மாட்டார்கள்.

எஸ் பி ஆபீசிலிருந்து அழைப்பு என்று ராஜசேகருக்கு தகவல் வந்த போது அவனுக்கு தலை கால் புரியவில்லை. திடீரென்று எஸ்.பி கூப்பிடுகிறாரே. என்னவாக இருக்கும் என்று ஒரே சிந்தனை. எஸ்.பி அவனை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார் என்பதை அவரைச் சந்தித்ததும் புரிந்து கொண்டான்.
எஸ்பி அழைத்ததும் விரைப்பாக சல்யூட் அடித்தான்

வா“ங்க ராஜசேகர். ப்ளீஸ் சிட் டவுன்.“ “ஹவ் ஈஸ் த ந்யூ ஜாப். “ “ஐ ஹியர்ட் தட் யூ ஆர் அன் இன்ஜினியர் ? “
“எஸ் சார்“
“ஒய் டிட் யூ சூஸ் திஸ் ஜாப்“
“சார். ஐ வான்ட் டு டூ சம் சர்வீஸ் சார்“ என்றான் ராஜசேகர்.
“ஐ யம் ரியல்லி க்ளாட். ஐ ஹோப் யூ எக்செல் இன் யுர் ஜாப்“. என்றார் எஸ்பி. அந்த எஸ்பி யும் நேர்மையானவர் என்று பெயரெடுத்தவர் தான். அதனால் தான் அவருக்கு, இன்ஜினியரிங் முடித்து விட்டு, எஸ்ஐ யாக வந்த ராஜசேகரை பிடித்துப் போனது.

“ஆல் ரைட். உக்கிரன் கோட்டை வில்லேஜ்ல நெறய்ய இல்லிசிட் லிக்கர் இருக்கு. வாட் ஆர் யூ கோயிங் டு டூ அபவுட் இட் ? “
“சார் … எனக்கு ரெய்ட் போறதுக்கு பர்மிஷன் இல்ல சார்“ என்றான் ராஜசேகர். மாமூல் வாங்கிக் கொண்டு அவனை ரெய்ட் போக விடாமல் தடுக்கும் இன்ஸ்பெக்டரை காண்பித்துக் கொடுக்காமல் பதில் சொன்னான்.
“யூ வில் ரிப்போர்ட் டைரெக்ட்லி டு மி. டூ நாட் ரிப்போர்ட் டு யுவர் இன்ஸ்பெக்டர். ஓ.கே. எவ்ளோ முடியுமோ, அவ்ளோ ஃப்ரீக்வென்ட்டா ரெய்ட் நடத்துங்க“ என்று உத்தரவிட்டார் எஸ்.பி.
“ஆல் ரைட் சார்“ என்றான்.

ன்று இரவே, இரண்டு கிராமங்களில் ரெய்டுகள். 400 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து ஸ்டேஷனில் வைத்தான் ராஜசேகர். அவனை கடும் கோபத்துடன் கேள்வி கேட்ட இன்ஸ்பெக்டரிடம், “எஸ்.பி உத்தரவு என்று தெரிவித்தவுடன், கப் சிப் என்று ஆனார் இன்ஸ்பெக்டர்.

என்னதான் எஸ்பி அவனுக்கு நெருக்கம் என்றாலும், ராஜசேகரின், ப்ரொபேஷன் முடிப்பது தொடர்பான அறிக்கை கொடுப்பது இன்ஸ்பெக்டர் தானே. ராஜசேகரின் ப்ரோபேஷனை ஒரு வருட காலத்திற்கு நீட்டித்து பரிந்துரை செய்தார் இன்ஸ்பெக்டர்.
உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றல் வேண்டுமென்று எழுதிக் கொடுத்தான். எஸ்பியும் அவனது விண்ணப்பத்திற்கு பரிந்துரை செய்ததால் ஒரு மாதத்திலேயே மாறுதல் கிடைத்து, சென்னைக்கு மாறுதல் ஆனான் ராஜசேகர்.




ரவு பகலாக வேலை செய்து பழக்கப் பட்ட ராஜசேகருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் வேலையே இல்லை. இன்ஸ்பெக்டராக ப்ரோமோஷனும் கிடைத்தது. நிறைய ஓய்வு கிடைத்ததால், ராஜசேகரின் கவனம் புத்தகங்கள் மீது திரும்பியது. அவ்வாறு புத்தகங்கள் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போதுதான், அவனுக்கு சுரேஷின் நட்பு ஏற்பட்டது.

சுரேஷ் லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே, அமைச்சுப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தவர். இருவரின் சிந்தனைப் போக்குகள் ஒன்றாக இருந்தால், அவர்களுக்கிடையே நட்பு ஏற்படுவது இயல்பு தானே ? அப்படித் தான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.
“சார். நாளைக்கு பெரியார் திடலில் ஒரு கூட்டம் இருக்கு சார்“



“போலாம் சார்“ என்று உடனடியாக சொன்னார் ராஜசேகர். இப்படி, தினமும் ஒரு நாடகம், ஒரு கூட்டம், ஒரு புத்தகம் என்று இவர்கள் நட்பு வளர்ந்து கொண்டே போனது.
இருவரும் வீட்டுக்கு சென்று சாப்பிடும் அளவுக்கு நட்பு வளர்ந்தது.
இதற்குள் ராஜசேகருக்கு இலவச அட்வைஸ்.

தே துறையில் டிஎஸ்பி யாக இருந்து பொன்னுச்சாமிக்கு, தான் வேலை பார்த்த நெல்லை
மாவட்டத்தில் ராஜசேகர் வேலைப் பார்த்திருப்பதால் ஒரு பாசம் உண்டு.
“ராஜேசேகர், நீங்க சுரேஷ் கூட ரொம்ப சுத்திக்கிட்டு இருக்கீங்களாமே“
“சார். நல்ல *ஃப்ரேன்டு சார் அவரு“

“ராஜசேகர், மினிஸ்டீரியல் ஸ்டாஃப் கிட்டயேல்லாம் ரொம்ப வச்சுக்காதீங்க. அதுவும் அந்த சுரேஷ் ரொம்ப திமிரு புடிச்சவன். பெரிய மயிருன்னு நெனப்பு அவனுக்கு. “
“சார் என்கிட்ட நல்லாத்தான் சார் நடந்துக்கிறாரு“
“நல்லாத்தான் நடந்துக்குவான். நீங்க அவன் கூட தேவையில்லாம பேச்சு வச்சுக்காதீங்க பிரதர்“ என்றார்.

எதற்காக இப்படி சொல்கிறார் டிஎஸ்பி. மினிஸ்டீரியல் ஸ்டாப் கூட பேசினால் என்ன என்று ஒன்றுமே புரியவில்லை ராஜசேகருக்கு.
திடீரென்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தவரும், தலைமைச் செயலாளரும் பேசிக் கொண்ட உரையாடல் ஒரு பேப்பரில் வந்ததாக ஆபீசே பரபரப்பானது. அன்று சுரேஷ் வீட்டுக்கு வந்த போது, இது பற்றி பேசிக் கொண்டார்கள்.
“என்ன சார் டைரக்டர் பற்றி இப்படி ந்யூஸ் வருதே பேப்பர்ல“ என்றார் ராஜசேகர்.
“வரட்டும் சார். இவனுங்க பண்ற அயோக்கியத்தனம் வெளில தெரியட்டுமே. தெரிஞ்சாத்தான் இவனுங்க யோக்கியதை என்னன்னு தெரியும் சார்“ என்றான் சுரேஷ்.
“சரி விடுங்க சார். நமக்கென்ன. நம்ம வேலையப் பாப்போம்“ என்று சுரேஷே அந்த உரையாடலை முடித்தான்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு, இருவரும் சேர்ந்து ஊர் சுற்றுவதும், அரட்டை அடிப்பதுவுமாக பொழுது கழிந்தது.

ன்று வழக்கம் போல, வேலை முடிந்து உறங்கிக் கொண்டிருந்தான் ராஜசேகர். சங்கம் தியேட்டர் எதிரில் இருந்த அந்த போலீஸ் க்வார்ட்டர்ஸ் அமைதியாக இருந்தது. எப்போதாவது, நைட் ட்யூட்டி முடித்து வந்தவர்களின் வாகனச் சத்தம் மட்டும் கேட்டது.

திடீரென்று, மிகுந்த சத்தத்தோடு ஹார்ன் அடித்தது. யார் இது, போலீஸ் க்வார்ட்டர்ஸ்ல வந்து இப்படி ஹார்ன் அடிப்பது என்று யோசனையோடு எழுந்தான் ராஜசேகர்.
படபட வென கதவு தட்டப் படும் சத்தம் கேட்டது. அவன் மனைவி, எழுந்து வந்து, ஏங்க யாருன்னு பாருங்க என்றதை காதில் வாங்கிக் கொண்டே, கண்ணை துடைத்துக் கொண்டு, கதவைத் திறந்த போது, வாசலில் சபாரி அணிந்த ஒருவரும், பத்துக்கும் மேற்பட்ட போலீஸ் காரர்களும் நிற்பது தெரிந்தது.
வெளியில் வந்தால், அந்த களேபரத்தில் மொத்த க்வார்ட்டர்சும் விழித்து கதவைத் திறந்து கொண்டு தன்னுடைய வீட்டையே பார்ப்பது தெரிந்தது.
“நீதான் ராஜசேகரா“



“சார் விஜிலென்ஸ் இன்ஸ்பெக்டர் சார்“ என்றான் ராஜசேகர்.
“தெரியுண்டா.. சட்டைய மாட்டிக்கிட்டு இறங்கி வாடா… நானும் போலீஸ் தான்“ என்ற மரியாதைக் குறைவான வார்த்தைகள் ராஜசேகரை நிலை தடுமாறச் செய்தன.
உடனடியாக சட்டையை மாட்டிக் கொள்ள உள்ளே சென்றபோது, அவனுடனேயே, இரண்டு போலீஸ் காரர்கள் ஷுவைக் கூட கழற்றாமல், உள்ளே நுழைந்தது கண்டு ஒன்றும் பேசத் தோன்றாமல், சட்டையை மாட்டினான். வெளியில் வந்ததும், இரண்டு போலீஸ் காரர்களும், ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் கொண்டனர்.

ன்னொரு போலீஸ் காரன், முதுகில் கை வைத்து தள்ளினான். மரியாதையாய் வாழ்ந்த க்வார்ட்டர்சில், அனைவரும் வேடிக்கை பார்த்ததை கண்டு, கூனிக் குறுகிப் போனான். அழுத மனைவியை சமாதானம் செய்து விட்டு அவர்களுடன் கீழே இறங்கினான்.

ஜீப்பின் பின்னால் ஏற்றப் பட்டான். அருகே இரு புறமும், போலீஸ் காரர்கள் அவன் கையை பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டனர்.
“அந்தத் தேவடியாப் பையனுக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம் ? “ என்ற போது, யாரை சொல்கிறார் என்று புரியாமல் பார்த்தான்.“ “யாருன்னு தெரியுதாடா ?“ “அந்த சுரேஷ் தேவடியாப் பையனோட உனக்கு என்னடா பேச்சு“ ரெண்டு பேரும் சேந்துதான் செஞ்சீங்களா“.
“யோவ்…. ஹேன்ட் கஃப் போடுய்யா“ என்ற வார்த்யை கேட்டு, அவனையும் அறியாமல், ராஜசேகருக்கு கண்ணில் நீர் வழிந்தது.



சவுக்கு

6 comments:

Sweatha Sanjana said...

We are proud of inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

போளூர் தயாநிதி said...

parattugal
polurdhayanithi

சி.பி.செந்தில்குமார் said...

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த போலீஸின் அட்டூழியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் போல...

Dino LA said...

சிறப்பான பார்வை

Anonymous said...

Is that u?

Anonymous said...

ஒன்னு சவுக்குன்னு தெரியும் இன்னொருத்தரு யாருப்பாவரு ?

Post a Comment

அன்போடு கருத்திட்டு என்னை ஊக்கப் படுத்துங்கள்.